பாகிஸ்தான் நாட்டில் இரு யூடியூப் ஜோடிகள் பலரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தங்களின் திருமணத்தை தடபுடலாக நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த திருணத்தை விட மாப்பிள்ளை தனது காதல் மனைவிக்கு கொடுத்த பரிசு தான் பிரபலமான பேசுபொருளாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல யூடியூபர் அஸ்லான் ஷா. இவர் கராச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆவர். இவர் மற்றொரு சோசியல் மீடியா இன்ப்ளூன்சரான வாரிஷா ஜாவேத் கான் என்ற பெண்ணை விரும்பி மணம் முடித்துக்கொண்டார். இவர் தனது திருமணத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விரும்பி அதற்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்தார். அத்தோடு, தனது காதல் மனைவிக்கென சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை தந்துள்ளார்.
இந்த பரிசு காதலிக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும் சர்ப்ரைசாக அமைந்தது. ஆம் அஸ்லான் தனது புது மனைவிக்கு திருமண வரவேற்பு அன்று கழுதைக் குட்டி ஒன்றை பரிசாக தந்துள்ளார். இந்த கழுதைக் குட்டியை ஆசையாக வாங்கிக்கொண்ட புதுப்பெண் வாரிஷா, ஏன் இதை உங்களுக்கு பரிசாக தர வேண்டும் என்று தோன்றியது என்று கேட்டார். அதற்கு அஸ்லான், "இது உனக்கு பிடித்த விலங்கு அல்லவா என்று பதில் கூறியதுடன், கழுதை தான் கடுமையாக உழைக்கும் அன்பான விலங்கு என்று பதில் கூறியுள்ளார். அதற்கு கிண்டலாக மணப்பெண் வாரிஷாவும், நான் உங்களை கழுதை போல் ஆகவிடமாட்டேன்" என்று பதில் கூறியுள்ளார்.
View this post on Instagram
இவர்களின் இந்த ஜாலி பேச்சை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்திருந்த பலருமே இந்த கழுதை பரிசை கிண்டல் செய்து கமெண்ட் அடித்துள்ளனர். அதற்கு அஸ்லான் யார் என்ன சொன்னாலும் கழுதை மிகச் சிறந்த விலங்கு தான். நான் விரும்பும் விலங்கு. எனவே, இது தான் வாரிஷாவுக்கு நான் தரும் பரிசு என்றுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்கள் கண்காணிப்பில் 6-ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.பிக்கள் - பிரிட்டனில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
மேலும், இந்த கழுதை குட்டியை தாயிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் தாய் கழுதையையும் சேர்த்து வாங்கி வந்துள்ளார் அஸ்லான். பாகிஸ்தான் ஊடகங்களின் தகவல்படி, அஸ்லான் மற்றும் வாரிஷாவின் திருமணம் தான் பாகிஸ்தானிலேயே மிக விலை உயர்ந்த திருமணமாகும். ஆனால், இந்த திருமண செலவை விட அஸ்லான் கொடுத்த பரிசு தான் சர்வதேச அளவில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral Video, Youtube