பாம்பு, முதலைகளை வைத்து பிரதமர் மோடியை கொல்வேன் - பாகிஸ்தான் பாடகி வெளியிட்ட வீடியோ

news18
Updated: September 15, 2019, 1:08 PM IST
பாம்பு, முதலைகளை வைத்து பிரதமர் மோடியை கொல்வேன் - பாகிஸ்தான் பாடகி வெளியிட்ட வீடியோ
news18
Updated: September 15, 2019, 1:08 PM IST
பிரபல பாகிஸ்தான் பாடகி ஒருவர் நரேந்திர மோடியை கொல்வதாக பாம்பு, முதலைகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் பிரபல பாடகி ரபி பிர்ஸாடா. இவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கை நிறைய விஷ பாம்புகளை அவர் வைத்துள்ளார். தரையில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் இருக்கிறது. அந்த பாம்புகள், முதலைகளோடு விளையாடும் அவர், நீங்கள் (மோடி) காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள். இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. இறப்பதற்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.Loading...

இந்த வீடியோ வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது லாகூரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Also watch

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...