புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு - பாக். அமைச்சர் ஒப்புதல்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு - பாக். அமைச்சர் ஒப்புதல்
புல்வாமா தாக்குதல்
  • Share this:
இந்திய ராணுவத்தினர் 40 பேர் வீரமரணம் அடைந்த புல்வாமா தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அந்நாட்டு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா பகுதியில், கடந்தாண்டு பிப்ரவரி 14ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில், சி.ஆர்.பி.எஃப்.படையைச் சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அமைச்சர் ஃபவாத் சவுத்ரி
அமைச்சர் ஃபவாத் சவுத்ரிஇந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடித் தொடர்பு இருந்ததாக தெரிவித்தார்.இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில் இம்ரான் கான் அரசுக்கும், பி.டி.ஐ. கட்சிக்கும் பங்கு இருந்ததாகவும், இந்தச் செயலானது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி எனவும் நாடாளுமன்றத்தில் பெருமிதத்துடன் பேசினார். அபிநந்தனை விடுவித்தது குறித்து, எதிர்கட்சிகளுடனான காரசார விவாதத்தின்போது, அமைச்சர் ஃபவத் சவுத்ரி புல்வாமா தாக்குதல் குறித்து அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading