முகப்பு /செய்தி /இந்தியா / தேசம் கடந்த காதல்.. காதலனுக்காக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளம்பெண்.. பிரித்து அனுப்பிய போலீசார்..!

தேசம் கடந்த காதல்.. காதலனுக்காக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளம்பெண்.. பிரித்து அனுப்பிய போலீசார்..!

பெங்களூருவில் கைது  செய்யப்பட்ட ஜோடி

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஜோடி

லூடோ விளையாட்டு மூலம் அறிமுகமாகி இந்தியரை காதலித்த பாகிஸ்தான் பெண், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் என்ற 26 வயது இளைஞர் பெங்களூருவில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு லூடோ விளையாட்டில் ஆர்வம் அதிகம். அவ்வாறு செல்போனில் லூடோ விளையாடிக் கொண்டிருக்கும் போது கடந்தாண்டு இர்கா ஜீவானி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு படிக்கும் 19 வயதான அந்த பெண் தான் ஐதராபாத்தில் வசிப்பதாகக் கூறி பழகியுள்ளார்.

இருவருக்கும் இது காதலாக மாறியது. பின்னர் சிறிது காலத்திற்கு பின்னர் தான் அந்த பெண் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல, பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இருப்பினும் இருவரும் காதலை விட முடியாமல் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, அந்த பெண்ணை வீட்டைவிட்டு வெளியேறி நேபாள நாட்டின் காத்மண்டுவுக்கு வரச் சொல்லியுள்ளார் முலாயம்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து அந்த பெண் வெளியேறி நேபாளத்திற்கு வர அங்கு அந்த பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பின்னர் பீகார் வழியாக இந்தியா வந்து, பெங்களூருவில் தங்கி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் பெயை ராவா யாதவ் என மாற்றி அவருக்கு ஆதார் அட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொடுத்த தகவலின் படி மாநில உளவுத்துறையினரால் அந்த பெண் காண்காணிக்கப்பட்டார்.

அதன் அடிப்பைடயில் கடந்த ஜனவரி மாதம் கர்நாடக காவல்துறை நடத்திய சோதனையில் உண்மை அம்பலமானது. இருவரையும் பெங்களூரு காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பெண்ணை காவல்துறையினர் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில்  ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லையில் பாகிஸ்தான் அலுவலர்களிடம் இந்திய காவல்துறையினர் இர்காவை ஒப்படைத்தனர். அனைத்து அலுவல் நடவடிக்கைக்குப் பின்னர் பிப்ரவரி 21 இர்காவை ஐதரபாத்தில் உள்ள அவரது குடும்பத்துடன் பாகிஸ்தான் அதிகாரிகள் சேர்த்து வைத்தனர்.

First published:

Tags: Bengaluru, India and Pakistan, Lovers