#Breaking இந்திய எல்லைக்குள் நுழைந்து பாக். விமானங்கள் குண்டு வீசியதாக தகவல்

India Strikes Back | காஷ்மீர் எல்லையை ஒட்டிய பகுதியில் வான் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

#Breaking இந்திய எல்லைக்குள் நுழைந்து பாக். விமானங்கள் குண்டு வீசியதாக தகவல்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: February 27, 2019, 11:48 AM IST
  • Share this:
பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்திய நிலையில்,  ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இன்று பாகிஸ்தானின் விமானப்படை ஊடுருவி குண்டு வீசியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.


இந்நிலையில், இன்று காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ஊடுருவியுள்ளது.

உடனடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானங்களை விரட்டியுள்ளது. இதனால், பின் வாங்கிய பாகிஸ்தான் விமானம் போகும் போது குண்டுகளை வீசிச்சென்றுள்ளதாக விமானப்படையில் இருந்து வெளியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவ அலுவலக முகாம்களின் அருகில் குண்டுகள் விழுந்தாலும், இதில் எந்த சேதமும் ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அரசுத்தரப்பு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. காஷ்மீர் எல்லையை ஒட்டிய பகுதியில் வான் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்...

LIVE: இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

 
First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading