இந்திய போர் விமானத்தை கண்டு பின்வாங்கிய பாகிஸ்தானின் போர் விமானம்!

Surgical Strike 2.0 | புல்வாமா தாக்குதல் நடந்து 40 நாட்களுக்குப் பிறகு இந்திய விமானப்படை தனது அதிரடியை காட்டியுள்ளது.

இந்திய போர் விமானத்தை கண்டு பின்வாங்கிய பாகிஸ்தானின் போர் விமானம்!
இந்திய போர் விமானங்கள் ஊடுருவுகையில் அதனை தடுக்க வந்த பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம், பின்னர் இந்திய போர் விமானங்களின் பலத்தை பார்த்து பின் வாங்கியதாக இந்த ஆஃபரேஷனை திட்டமிட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • News18 Tamil
  • Last Updated: February 26, 2019, 12:07 PM IST
  • Share this:
இந்திய போர் விமானங்கள் ஊடுருவுகையில் அதனை தடுக்க வந்த பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம், பின்னர் இந்திய போர் விமானங்களின் பலத்தை பார்த்து பின் வாங்கியதாக இந்த ஆஃபரேஷனை திட்டமிட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தோல்வியே வீரர்கள் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதற்ற நிலை நீடித்தே வந்தது.


இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.
 

இதற்கிடையே, இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர், “இன்று காலை எல்லையிலிருந்து 3 மைல் தொலைவில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் அதனை விரட்டி அடித்தன. அந்த நேரத்தில் வெடிகுண்டுகளை திறந்த வெளியில் இந்தியப்படைகள் வீசியுள்ளது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாக். ராணுவம் பகிர்ந்த புகைப்படங்கள்


புல்வாமா தாக்குதல் நடந்து 40 நாட்களுக்குப்பிறகு இந்திய விமானப்படை தனது அதிரடியை காட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலைமையில் அவசரக்கூட்டம் நடந்து வருகிறது.

இன்று காலை நடந்த தாக்குதலின் போது, இந்திய போர் விமானங்கள் ஊடுருவுகையில் அதனை தடுக்க வந்த பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம், பின்னர் இந்திய போர் விமானங்கள் அணிவகுத்து வந்ததை பார்த்து பின் வாங்கியதாக இந்த ஆஃபரேஷனை திட்டமிட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also See...

First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading