ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராஜஸ்தானில் விற்கப்பட்ட பாகிஸ்தானின் மாட்டிறைச்சி சாக்லெட்.?! பரபர புகார்!

ராஜஸ்தானில் விற்கப்பட்ட பாகிஸ்தானின் மாட்டிறைச்சி சாக்லெட்.?! பரபர புகார்!

பாகிஸ்தான் மாட்டிறைச்சி மிட்டாய்

பாகிஸ்தான் மாட்டிறைச்சி மிட்டாய்

உதய்பூர் டெல்லி கேட் பகுதில் உள்ள ஒரு கடையில்  மட்டும் 3 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udaipur, India

மாட்டு இறைச்சியில் இருந்து எடுக்கும் ஜெலட்டினால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தான்  சாக்லேட் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் விற்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

உதய்ப்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் உள்ள கடையில் மாட்டிறைச்சி ஜெலட்டின் சாக்லேட்  விற்கப்படுவதாக புகார் வந்தவுடனேயே மருத்துவ மற்றும் சுகாதார துறை குழு சம்பவ இடத்திற்கு வந்து கடையில் இருந்த மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட அனைத்து டாஃபிகளையும் கைப்பற்றினர்.

உதய்பூர் டெல்லி கேட் பகுதில் உள்ள ஒரு கடையில்  மட்டும் 3 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 24 மிட்டாய்கள் அடங்கிய ஒரு பொட்டலம் 20 ரூபாய் என்று விற்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த கடையில் இருந்து நகரில் உள்ள மற்ற கடைகளுக்கும் மிட்டாய்கள் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. கடைக்காரரை விசாரித்தபோது, மும்பையில் இருந்து மிட்டாய்களை வாங்கியதாகக் கூறினார். ஆனால் அதற்கான பில் பெறவில்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் பெட்ரூம்.. தெலுங்கானாவில் கிச்சன்.. வீட்டுக்கு குறுக்கே செல்லும் மாநில எல்லைகள்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஜெலட்டின் மிட்டாய்கள் என்பது பிரபலமானது. அங்கிருந்த மன்னர்கள் பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்ததில் இருந்து இந்தியாவிலும் இந்த மிட்டாய்கள் புழக்கத்திற்கு வந்தது.

பொதுவாக செயற்கை ஜெலட்டின் சேர்த்து மிட்டாய்கள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால் இப்போது கைப்பற்றப்பட்டுள்ள மிட்டாய்கள் மாட்டு தோல், முடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த மிட்டாய் பொட்டலத்தின் கவரில் "சில்லி-மிலி" - குழந்தைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும்  தயாரித்த நிறுவனத்தின் முகவரி பாய் இஸ்மாயில் இண்டஸ்ட்ரி லிமிடெட் C-230,ஹைட் ஹப்,பலுசிஸ்தான், பாகிஸ்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு இறைச்சி கலந்த உணவு என்பதற்கான சிவப்பு வண்ண குறியீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இறைச்சி கலந்து முட்டையை சந்தையில் குழந்தைகளுக்கு விற்பனை செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு அதிகாரிகள் உடனடியாக இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Chocolate, India and Pakistan, Udaipur S20p19