பாக். தகுந்த விலை கொடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

news18
Updated: February 13, 2018, 2:32 PM IST
பாக். தகுந்த விலை கொடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
news18
Updated: February 13, 2018, 2:32 PM IST
சஞ்சுவான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தகுந்த விலை கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் புறநகர் பகுதியில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த ராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்த  தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். கிட்டத்தட்ட 27 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல ஸ்ரீநகரில் உள்ள  சிஆர்பிஎப் படை வீரர்கள் முகாமில்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இந்த இரு தாக்குதலையும் லஷ்கர் இ தய்பா இயக்கம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சண்டையில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில்,  ``இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஆதரவு இருக்கிறது. உள்நாட்டு ஆதரவு இல்லாமல் இந்த தீவிரவாதிகள் எல்லையை கடந்து வரமுடியாது. பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற  ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தகுந்த விலைக் கொடுக்க வேண்டும். நான் மீண்டும் உறுதியாக கூறிகிறேன், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய விலையை கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்