இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பயம்.. கால்கள் நடுங்கிய பாக். ராணுவ தளபதி - பாக். எம்.பி. பேச்சு

அபிநந்தன் விவகாரத்தில் அவரை விடுவிப்பதை தவிர இம்ரான் கானுக்கு வேறு வழியில்லை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பயம்.. கால்கள் நடுங்கிய பாக். ராணுவ தளபதி - பாக். எம்.பி. பேச்சு
அயாஸ் சாதிக், அபிநந்தன்
  • Share this:
அபிநந்தன் விவகாரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தும் என கேட்டதும், பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் கால்கள் நடுங்கியதாக அந்நாட்டு எம்.பி. கூறியுள்ளார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய விமானப்படை போர் விமானி அபிநந்தன் பிடிக்கப்பட்டது, இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர், பேச்சுவார்த்தைக்கு பின் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் எம்.பி. அயாஸ் சாதிக் இது தொடர்பாக கூறுகையில், அபிநந்தன் விவகாரத்தில் அவரை விடுவிப்பதை தவிர இம்ரான் கானுக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அபிநந்தன் பிடிபட்டதை தொடர்ந்து நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு வந்த வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பிப்ரவரி 27-ம் தேதி இரவு 9 மணிக்குள் அபிநந்தனை விடுவிக்காவிட்டால், இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறினார். இதனை கேட்ட ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கி, அவருக்கு வியர்வை கொட்டியதாகவும் அயாஸ் சாதிக் கூறியுள்ளார்.


இதுகுறித்து பேசிய இந்தியா முன்னாள் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, இந்திய ராணுவத்தின் வலிமையை வைத்தே பாகிஸ்தான் எம்.பி. அவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்தார். மேலும், அபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாங்கள் பாகிஸ்தானின் முதற்கட்ட படைப்பிரிவுகளை தகர்த்தெறிய தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading