Home /News /national /

கழுத்து வளைவு பாதிப்பால் அவதிப்பட்ட பாகிஸ்தான் சிறுமி, இலவசமாக சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர்

கழுத்து வளைவு பாதிப்பால் அவதிப்பட்ட பாகிஸ்தான் சிறுமி, இலவசமாக சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர்

கழுத்து வளைவு பாதிப்புக்கு ஆளான சிறுமி

கழுத்து வளைவு பாதிப்புக்கு ஆளான சிறுமி

பத்து மாதக் குழந்தையாக இருந்த போது சிறுமி, அவரின் சகோதரி கையில் இருந்து தவறி விழுந்த நிலையில் கழுத்து 90 டிகிரி வளைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுமி கழுத்து வளைவு பாதிப்பால் அவதிப்பட்டுவந்த நிலையில், அவருக்கு டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் இலவசமாக சிகிச்சை அளித்து காத்து வருகிறார். பாகிஸ்தானின் சிந்த் பிராந்தியத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அஃப்ஷின் குல், தனது ஒரு வயதில் இருந்தே கழுத்து வளைவு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இவர் பத்து மாதக் குழந்தையாக இருந்த போது அவரது சகோதரி கையில் இருந்து தவறி விழுந்த நிலையில் கழுத்து 90 டிகிரி வளைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அருகே உள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்று உயிர் காக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினரால் பணம் செலவு செய்ய முடியவில்லை. அத்துடன் அஃஷினுக்கு செரிபெரல் பலசி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதிப்பு காரணமாக, 12 ஆண்டுகளாக தவித்து வந்த அந்த சிறுமியின் உடல் நிலை குறித்து 2017ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நடிகர் அஷான் கான் பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டார். அதன் பேரில் கடும் சவால்களுக்குப் பின், பிரிட்டன் நாட்டின் ஊடகவியலாளர் அலெக்ஸ்சான்ட்ரியா தாமஸ் டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ராஜகோபலன் கிருஷ்ணன் என்பவரிடம் இந்த பெண் குறித்து தெரிவித்துள்ளார்.

    பின்னர் மருத்துவர் இந்த சிறுமிக்கு சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்ட நிலையில், சிறுமியின் குடும்பத்தார் மருத்துவரை தொடர்பு கொண்டனர். இதைத் தொடர்ந்து கடந்த வருடம் அந்த சிறுமி டெல்லி அழைத்து வரப்பட்டார். சில முக்கிய சிகிச்சைகள் செய்த பின்னர், பிப்ரவரி மாதம் பிரதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறு மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுமி நலமாக உள்ளார். உரிய நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் சிறுமி நீண்டநாள் வாழ்ந்திருக்க முடியாது எனவும், தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் உடல் நலன் தேறிவிடுவார் எனவும் மருத்துவர் ராஜகோபாலன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இங்கிலாந்தில் சுட்டெரிக்கும் சூரியன்.. வெப்பத்தால் தார் சாலைகள் உருகின

    மருத்துவர் தான் தனது தங்கையின் உயிரை காத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறும் சிறுமி அஃஷினின் சகோதரர் யாகூப் கும்பார், மருத்துவர் எங்களுக்கு தேவதையாக தென்படுகிறார் என்றார். சிறுமியின் சிகிச்சைக்காக மருத்துவர் ராஜகோபலன் ஒரு பைசா கூட பணம் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. உடல் நலம் தேறி சிறுமி பாகிஸ்தான் சென்ற நிலையில், சிறுமியின் உடல் நலனை மருத்துவர் ராஜகோபாலன் வாரம் தோறும் ஸ்கைப் மூலம் விசாரித்து வருகிறார். இயல்பாக நடக்கமுடியாமல், சாப்பிட முடியாமல், பேச முடியாமல் தவித்து வந்த சிறுமி மருத்துவரின் சிகிச்சையால் தற்போது புத்துயிர் பெற்று வாழ்ந்து வருகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Doctor, Neck, Treatment

    அடுத்த செய்தி