காஷ்மீர் விவகாரம்: இந்தியத் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரையும் நாடு திரும்புமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம்: இந்தியத் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 7, 2019, 8:30 PM IST
  • Share this:
காஷ்மீர் விவகாரத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அந்நாடு வெளியேற்றியுள்ளது.

மேலும், இருநாட்டுக்கு இடையேயான வர்த்தக உறவையும் நிறுத்திக்கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமதி வெளியிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் நேற்று பாகிஸ்தான் பாதிகாப்புக் குழு உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த முடிவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:


1. தூதரக உறவை முறித்துக்கொள்ளுதல்
2. இருநாட்டு வர்த்தக உறவை நிறுத்திக்கொள்ளுதல்
3. இருதரப்பு விவகாரங்களை மதிப்பாய்வு செய்தல்4. காஷ்மீர் விவகாரத்தை ஐநா வரை எடுத்துச் செல்லுதல்
5. இந்திய சுதந்திர நாளான ஆகஸ்ட் 15-ம் தேதியை ‘கறுப்பு தினம்’ ஆகக் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மனித உரிமை மீறலையும் இனவாத ஆட்சியையும் செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவம் எல்லைகளில் மிகவும் கவனமுடன் இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா! மக்களவையிலும் நிறைவேறியது
First published: August 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading