ஹோம் /நியூஸ் /இந்தியா /

‘ஊழலற்றவர்’- பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய இம்ரான் கான்

‘ஊழலற்றவர்’- பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய இம்ரான் கான்

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஊழல் விவகாரத்திலும் சொத்துக்குவிப்பு விவகாரத்திலும் சிக்கி சின்னாபின்னமான நவாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியை பாராட்டித்தள்ளியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஊழல் விவகாரத்திலும் சொத்துக்குவிப்பு விவகாரத்திலும் சிக்கி சின்னாபின்னமான நவாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இந்திய பிரதமர் மோடியை பாராட்டித் தள்ளியுள்ளார்.

  வைரலான இந்த வீடியோவில் இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அயல்நாடுகளில் குவித்துள்ள பில்லியன்கள் மதிப்புடைய சொத்துக்குவிப்பு பற்றி புட்டுப் புட்டு வைத்தார்.

  “நவாஸை தவிர உலகின் எந்த ஒரு அரசியல் தலைவரும் இத்தனை பில்லியன்களில் சொத்துக்களை அயல்நாட்டில் வைத்திருக்க மாட்டார்கள்” என்று இம்ரான் கான் அட்டாக் செய்தார்.

  “ நவாஸ் ஷெரீப் போல் யாராவது அயல்நாடுகளில் இத்தனை சொத்துக்களை குவித்தவர்கள் இருக்கிறார்களா? ஒரு பிரதமர் அல்லது தலைவரைக் காட்டுங்கள்.  நம் அண்டை நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள் பிரதமர் நரேந்திர மோடி அயல்நாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கிறாரா?

  நவாஸ் ஷெரீப் வைத்திருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது” என்று சாடினார் இம்ரான் கான்.

  இம்ரான் கான் முன்பேயும்கூட  இந்தியாவையும் இந்திய மக்களையும் பாராட்டியுள்ளார்.  “இந்தியர்கள் சுயமரியாதை மிக்கவர்கள், இந்தியாவை எந்த சூப்பர் பவரும் ஆதிக்கம் செலுத்த முடியாது” என்று இம்ரான் கூறியுள்ளார்.

  மேலும் “இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரத்தை சேர்ந்துதான் பெற்றனர், ஆனால் பாகிஸ்தானை சூப்பர் பவர்கள் டிஸ்யூ பேப்பர் போல் பயன்படுத்தித் தூக்கி எறிகின்றனர்.

  Read More: கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு.. மனம் வலிக்கிறது - ஷிகர் தவான் வேதனை

  இதைச்சொல்லும் போது நான் அமெரிக்க எதிரி அல்ல ஆனால் நம்மை அவ்வாறு சூப்பர் பவர் பயன்படுத்துவது ‘நம் இறையாண்மை மீதான தாக்குதல்’ என்று இம்ரான் ஏற்கெனவே பேசியதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Corruption, Imran khan, Narendra Modi