முகப்பு /செய்தி /இந்தியா / 30 ஆயிரம் ரூபாய்க்காக இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி... பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்

30 ஆயிரம் ரூபாய்க்காக இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி... பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

சதி வேலைக்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி யூனுஸ் சவுத்ரி என்பவரால், அந்நாட்டு மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு இந்திய எல்லைக்குள் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

  • Last Updated :
  • Jammu, India

ஜம்மு காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதி, 30 ஆயிரம் ரூபாய்க்காக இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நவ்ஷேரா ஜங்கர் செக்டா பகுதியில், மின்வேலியை துண்டித்துவிட்டு 3 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். அப்பகுதியை நோக்கி ராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் இருவர் படுகாயங்களுடன் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

ஒருவர் ராணுவத்தினரிடம் சிக்கினார். காயங்களுடன் பிடிப்பட்ட இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில், இந்திய ராணுவத்தினர் ரத்தம் கொடுத்து, உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கும் உதவியுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சதி வேலைக்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி யூனுஸ் சவுத்ரி என்பவரால், அந்நாட்டு மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு இந்திய எல்லைக்குள் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் டெலிட் ஆனது

இதே இளைஞர் கடந்த 2016ம் ஆண்டு அவரது சகோதரருடன் ராணுவத்தினரிடம் சிக்கியதும், பின்னர் மனிதாபிமான முறையில் 2017ல் விடுவிக்கப்பட்டதாகவும் ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் நிறைய பதுங்கு குழிகள் இருப்பதால் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Jammu and Kashmir, Pakistan Army, Terror Attack