• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விமானப்படை தாக்குதல் எதிரொலி: இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

விமானப்படை தாக்குதல் எதிரொலி: இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது என்று அந்நாடு அறிவித்துள்ளது.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்தின.



    தீவிரவாதிகள் முகாம் மீது, 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்திய விமானப்படையின், தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹூசைன் கூறியுள்ளார். இந்திய விளம்பரங்களைப் புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    முன்னதாக, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: