“இந்திய விமானப்படை வந்தது உண்மைதான்... ஆனால் தாக்குதல் இல்லை” பாக். ராணுவம் சமாளிப்பு

Surgical Strikes 2.0 | இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

“இந்திய விமானப்படை வந்தது உண்மைதான்... ஆனால் தாக்குதல் இல்லை” பாக். ராணுவம் சமாளிப்பு
பாக். ராணுவம் பகிர்ந்த புகைப்படங்கள்
  • News18
  • Last Updated: February 26, 2019, 11:12 AM IST
  • Share this:
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று காலை இந்திய விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்திய தாக்குதலில் எந்த பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தோல்வியே வீரர்கள் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதற்ற நிலை நீடித்தே வந்தது.


கோப்புப்படம்


இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

Loading...

இந்திய விமானப்படை தாக்குதல்


இதற்கிடையே, இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர், “இன்று காலை எல்லையிலிருந்து 3 மைல் தொலைவில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் அதனை விரட்டி அடித்தன. அந்த நேரத்தில் வெடிகுண்டுகளை திறந்த வெளியில் இந்தியப்படைகள் வீசியுள்ளது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.First published: February 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...