360 இந்திய மீனவர்களை சிறையிலிருந்து விடுவிக்கத் தயார் - பாகிஸ்தான்

பாகிஸ்தான் சிறைகளிலிருந்து விடுதலை ஆக உள்ள 360 மீனவர்களில் 355 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

Web Desk | news18
Updated: April 5, 2019, 3:38 PM IST
360 இந்திய மீனவர்களை சிறையிலிருந்து விடுவிக்கத் தயார் - பாகிஸ்தான்
மாதிரிப்படம் (Reuters).
Web Desk | news18
Updated: April 5, 2019, 3:38 PM IST
பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்களை இன்று முதல் நான்கு பிரிவுகளாக விடுவிக்க முடிவெடுத்திருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா இடையேயான அமைதி மற்றும் ஜனநாயக மக்கள் மன்றத்தில் நிர்வாக உறுப்பினர் ஜீவன் ஜூங்கி கூறுகையில், “ பாகிஸ்தான் சிறைகளிலிருந்து விடுதலை ஆக உள்ள 360 மீனவர்களில் 355 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தானின் இச்செய்தி மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் மிகவும் நல்ல செய்தி ஆகும். 360 இந்திய மீனவர்களில் முதல் குழுவில் 100 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் இன்று வெள்ளிக்கிழமை வாகா எல்லையை வந்தடைவர். இரண்டாம் குழுவிலும் 100 மீனவர்கள் ஏப்ரல் 15-ம் தேதியும் 100 பேர் கொண்ட மூன்றாம் குழுவும் 60 பேர் கொண்ட நான்காம் குழு ஏப்ரல் 29-ம் தேதியும் விடுதலை செய்யப்பட உள்ளனர்” என்றார்.

இந்த மீனவர்கள் அனைவரும் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம்15-ம் தேதி அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...

மேலும் பார்க்க: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத் அணி!
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...