Home /News /national /

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை

Indian army

Indian army

BAT என்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கலந்த ஒரு படை ஆகும். கொல்லப்பட்ட நபர் இந்த படையின் மூத்த உறுப்பினரான முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது கொல்லப்பட்ட நபர் பாகிஸ்தான் ராணுவ வீரர் என்பது சடலத்தின் அருகே கைப்பற்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

    இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 2021-ல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காமல் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த வாரம் காஷ்மீரில், ஐந்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது.

    இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரான் செக்டரில் பாகிஸ்தான் ராணுவத்தின் விஷேச எல்லை நடவடிக்கை குழுவினரின் (BAT) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். BAT என்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கலந்த ஒரு படை ஆகும். கொல்லப்பட்ட நபர் இந்த படையின் மூத்த உறுப்பினரான முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது.

    Also read:  டேமேஜ் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்த ஓலா நிறுவனம் - குவியும் புகார்கள் 

    இது குறித்து இந்திய ராணுவத்தின் GOC 28 Infantry பிரிவின் மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.பெந்தர்கர் கூறுகையில், இந்த ஊடுருவல் முயற்சியை தொடக்க நிலையிலேயே கண்காணித்தோம். பதுங்கியிருப்பவரை கண்டறிந்து சுட்டு வீழ்த்தினோம். அவரின் உடமைகளை சோதனையிட்டபோது ஒரு ஏ.கே ரக துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், 7 கையெறி குண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

    u324lheg
    பாகிஸ்தான் அரசால் அளிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்


    மேலும் பாகிஸ்தான் தேசிய அடையாள அட்டை, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான பாகிஸ்தான் சுகாதாரத்துறையினரால் அளிக்கப்பட்ட சான்றிதழ் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படத்தில் அந்த நபர் பாகிஸ்தான் ராணுவ சீருடையை அணிந்திருப்பதையும் காண முடிகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை கடந்த பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அவர்கள் மீறி செயல்படுகின்றனர்.

    also read : உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்...!

    எதிர் தரப்பில் உள்ள பாகிஸ்தான் முகாமை ஹாட்லைனில் தொடர்பு கொண்டு கொல்லப்பட்ட நபரின் உடலை பெற்றுச் செல்லுமாறு கூறியிருக்கிறோம். அந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.பெந்தர்கர் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Indian army, Jammu and Kashmir

    அடுத்த செய்தி