முகப்பு /செய்தி /இந்தியா / பஹாரி சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு..! - காஷ்மீரில் அமித் ஷா அறிவிப்பு

பஹாரி சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு..! - காஷ்மீரில் அமித் ஷா அறிவிப்பு

அமித் ஷா

அமித் ஷா

பஹாரி இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள பஹாரி சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். முதலில் கத்ராவுக்கு சென்ற அமித்ஷாவை, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற அமித் ஷா அங்கு சாமி தரிசனம் செய்தார்

பின்னர் ரஜோரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள மொழிவழி சிறுபான்மையினரான பஹாரிகளுக்கு பட்டியல் பழங்குடியினரின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

Also Read:  உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு - மாயமான 23 பேரை தேடும் பணி தீவிரம்

இந்தியாவில் மொழிவழி சிறுபான்மையினருக்கு பட்டியல் பழங்குடியினரின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படுவது இதுவே முதல்முறை. பஹாரி இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பஹாரிகளுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது அரசியல் ரீதியாகவும் காஷ்மீரில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். ஜம்மு காஷ்மீரில் குஜ்ஜார், பகர்வால் பழங்குடியினர் மற்றும் பஹாரிகளுக்கு இடையே ஏற்கெனவே மோதல் நிலவி வருகிறது. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பு அந்த மோதலை மேலும் அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

top videos

    குஜ்ஜர்கள் மற்றும் பகர்வால்கள் அங்கு ஏற்கனவே எஸ்டி அந்தஸ்தை அனுபவித்து வரும் நிலையில், ​​பஹாரிகளையும் எஸ்டியாக அங்கீகரிப்பது தங்கள் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    First published:

    Tags: Amith shah, BJP, Jammu and Kashmir, Tamil News