உலகம் முழுவதும் சென்று அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை பிடிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களை மத்திய அரசு கவரவித்துள்ளது.
வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கும் ORS solution கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவம் செய்துள்ளது.
அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள மாசி சடையன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாம்புகளை பிடித்துள்ளோம்; விஷத்தன்மையுள்ள ராஜநாக பாம்புகளை அதிகளவில் பிடித்துள்ளோம்; கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட பாம்புகள் தன்னை பலமுறை சீண்டி உள்ளன என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Irular, Padma Awards, Snake