ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு - ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு - ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பெட்ரோல் டீசல் வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான விலை ₹2.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைக்கப்படுவதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மீதான விலையை ஒரு ரூபாய் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 மத்திய அரசின் இந்த விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து ப. சிதம்பரம் தனது டிவிட்டரில் பக்கத்தில், ஓராண்டில் விலையை தாறுமாறாக உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்துவிட்டு, தற்போது ஒன்றரை ரூபாய் மட்டும் குறைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு இதனை செய்ய மறுப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை வருமானத்தில் சுகஜீவனம் நடத்தி வந்த மத்திய அரசுக்கு மக்களின் கஷ்டம் இப்போது தான் புரிகிறதா என்றும் சிதம்பரம் வினவியுள்ளார்.

First published: