பாரதியார் பாடல் மூலம் நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்!

"கர்நாடகா, கோவாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது"

news18
Updated: July 11, 2019, 4:37 PM IST
பாரதியார் பாடல் மூலம் நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்!
ப.சிதம்பரம்
news18
Updated: July 11, 2019, 4:37 PM IST
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் மூலம் பாராட்டினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரையில் புறநானூறு பாடல் ஒன்றை குறிப்பிட்டு விளக்கம் அளித்தார். அதாவது வரி விதிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் புறநானூறு பாடல் மூலம் விளக்கினார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, திருக்குறளைச் சுட்டிக்காட்டி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வரி விதிப்புகளை விமர்சித்தார். இதுவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியது.


நிர்மலா சீதாராமன்


இந்நிலையில், மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் மூலம் பாராட்டினார்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

Loading...

பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

எனும் பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமனை சிதம்பரம் பாராட்டினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய சிதம்பரம் கூறுகையில், “உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்காக மட்டும் நான் வருத்தமாக இல்லை. ஜனநாயகம் தினமும் அடிவாங்கிக் கொண்டிருப்பதற்காகவும்தான் வருத்தப்படுகிறேன்.

கர்நாடகா, கோவாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மையை எடுத்துக் கொண்டால், 62,907 கலாசி காலிப்பணியிடங்களுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 4,19,137 பேர் பி.டெக் படித்தவர்கள், 40,751 பேர் எம்.இ படித்தவர்கள். இதற்காக நான் நிர்மலா சீதாராமனை குறை கூறவில்லை. ஆனால், இந்தியாவின் நிலை தற்போது இதுதான்” என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனும் புறநானூறும்!ஆ.ராசாவும் திருக்குறளும்..!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...