தோல்வி பயத்தில் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி - ப. சிதம்பரம் விமர்சனம்

News18 Tamil
Updated: April 14, 2019, 9:46 AM IST
தோல்வி பயத்தில் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி - ப. சிதம்பரம் விமர்சனம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
News18 Tamil
Updated: April 14, 2019, 9:46 AM IST
பிரதமர் மோடி தோல்வி பயத்தில் பிரசாரம் செய்வதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான  ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நேற்றைய பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசாத விஷயங்கள் என சிலவற்றை பட்டியலிட்டார்.

நீட் தேர்வு,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு,  நெடுவாசல்  எரிவாயு சோதனைத் திட்டம் , அதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை என்ற ப. சிதம்பரம், அவரது உண்மையான சாதனைகளான, பணமதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் அழிப்பு, 4.7 கோடி வேலைகள் இழப்பு, பெண்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலித்துகளுக்கு பாதுகாப்பின்மை பற்றி பேசுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...