காஷ்மீர் மக்கள் ஏற்கனவே உள்ள ஊரடங்கிற்கு உள்ளே மற்றொரு ஊரடங்கை சந்தித்து வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 4வது கட்ட தேசிய ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், தான் காஷ்மீர் மக்களின் நிலை குறித்து சிந்திப்பதாக தெரிவித்துள்ளார்.
As we began Lockdown 4.0 yesterday, my thoughts were with the people of Kashmir who are in a terrible Lockdown within a Lockdown.
மெகபூபா முப்தி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் தற்போது வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களின் அனைத்து மனித உரிமைகளையும் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கை அனுபவித்து வரும் நாட்டின் பிற பகுதி மக்கள், தற்போதாவது தடுப்புக்காவலில் உள்ளோருக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், மனித உரிமைகளை காக்கும் அரசியல் சாசன கடமையில் இருந்து நீதிமன்றங்கள் 10 மாதங்களாக விலகிச் செல்வதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.