ரஃபேல் ஒப்பந்தத்தில் 41 % விலை உயர்வுக்கு மோடி அரசுதான் காரணம்- ப.சிதம்பரம்

விமானப்படைக்கு தேவையான 126 போர் விமானங்களுக்குப் பதிலாக வெறும் 36 போர் விமானங்களை வாங்கியதால் அவற்றின் விலையில் 41.42 உயர்ந்ததற்கு இந்த அரசு காரணமாகிவிட்டது என்றார் ப.சிதம்பரம்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் 41 % விலை உயர்வுக்கு மோடி அரசுதான் காரணம்- ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
  • News18
  • Last Updated: January 18, 2019, 7:46 PM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்களை வாங்கிய வகையில் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு சமரசம் செய்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய விமானப் படைக்கு தேவையான போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 2014-ல் மோடி ஆட்சி வந்த பிறகு, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

Rafale deal
கோப்புப் படம்ஒப்பந்தத்துக்கான கையெழுத்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இல்லாமல் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்கள் மட்டுமே வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியது. குறிப்பாக, புதிதாக வாங்கும் இந்த போர் விமானங்களைப் பராமரிக்கும் பொறுப்பை மத்திய அரசுக்கு சொந்தமான ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்துக்கு அளிக்காமல் முன் அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன்மூலம் தனது நண்பரான அனில் அம்பானிக்கு தனிப்பட்ட முறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் தேடித் தந்ததாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இன்று மோடி முன்னிலையில் நடைபெற்ற புதிய ரஃபேல் ஒப்பந்தத்தால் ஒரு போர் விமானத்தின் விலை முந்தைய ஒப்பந்த விலையை விட 41 % அளவுக்கு அதிகரித்துள்ளது என்று இந்து பத்திரிகையில் செய்தி வெளியானது.இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘விமானப்படைக்கு தேவையான 126 போர் விமானங்களுக்குப் பதிலாக வெறும் 36 போர் விமானங்களை வாங்கியதால் அவற்றின் விலையில் 41.42 உயர்ந்ததற்கு இந்த அரசு காரணமாகி விட்டது. விமானப்படையின் அத்தியாவசிய தேவையான 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கிய வகையில் நாட்டின் பாதுகாப்பில் இந்த அரசு சமரசம் செய்துகொண்டுள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Also see:

First published: January 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading