’காங்கிரஸ் சொன்னதைச் செய்யும்... ஆண்டுக்கு 72ஆயிரம் ரூபாய் உறுதி- ப.சிதம்பரம்

மாதம் 6ஆயிரம் ரூபாயை ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் உழைக்கவேமாட்டார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

Web Desk | news18
Updated: March 27, 2019, 12:34 PM IST
’காங்கிரஸ் சொன்னதைச் செய்யும்... ஆண்டுக்கு 72ஆயிரம் ரூபாய் உறுதி- ப.சிதம்பரம்
ப. சிதம்பரம்
Web Desk | news18
Updated: March 27, 2019, 12:34 PM IST
ராகுல் காந்தி கொடுத்த ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வாக்குறுதி குறித்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் குறித்தும் சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் மத்தியில் ப.சிதம்பரம் பேசினார்.

செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், “ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என்பது சாத்தியமே. இத்திட்டத்தை ஆட்சிக்கு வந்த உடனே செயல்படுத்த முடியாது. ஆனால், படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 12 சதவிகிதத்தை எட்டும்.

இந்தியாவின் வருமானம் இரட்டிப்பாகும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் போலவே இத்திட்டத்தையும் செயல்படுத்துவோம். ஆண்டுக்கு 72ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அது நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மற்றத் திட்டங்களின் மானியங்களை பாதிக்காது.

பா.ஜ.க புள்ளிவிவரத் தரவுகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றுகிறது. மாதம் 6ஆயிரம் ரூபாயை ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் உழைக்கவேமாட்டார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 400 லட்சம் கோடி ரூபாயை எட்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: மறுக்கப்பட்ட குக்கர் சின்னம்... எடுபடுமா புதிய சின்னம்?
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...