"பொருளாதாரம் ஐசியுவில் இருப்பதாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், அரவிந்த் சுப்ரமணியன் என அனைத்து மருத்துவர்களையும் நீங்கள் அனுப்பிவிட்டீர்கள்" என்று ராஜ்ய சபா எம்.பியும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசியுள்ளார்
மரியாதைக்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழு பட்ஜெட் உரையையும் கவனித்துக் கேட்டேன். என்ன நோக்கத்தை, கதையை நீங்கள் கூற விரும்புகிறீர்கள்? நல்லவேளையாக ”அச்சே தின் ஆனேவாலே” என்னும் முழக்கத்தை நீங்கள் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ்”. இந்த முழக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது இனிதான் தெரியவிருக்கிறது.
அரசின் பிரச்சனைகளை பட்டியலிட விரும்புகிறேன். இந்த அரசு செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதில்லை. பணமதிப்பிழப்பு ஒரு ஹிமாலயப் பேரிடர். ஜி.ஏஸ்.டியின் வடிவமைப்பு, விகிதங்கள், கட்டமைப்பு, தயார் நிலை இல்லாத ஒன்று. இவை கடந்த காலங்களில் நடந்தது. இவர்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதில்லை. மறுப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆறு காலாண்டுகளாக, பொருளாதாரம் சரிவு நிலையிலேயே தொடர்கிறது. இதுபோன்ற ஒரு நிலை வேறு எப்பொழுதாவது இருந்திருக்கிறதா என்பதை நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும். ஜோசியக்காரரைப் போல இப்போது அப்போது என்று மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் அமைப்பு ரீதியாக இருக்கிறது என்பதை பொருளாதார ஆலோசகரே சொல்கிறார். பொருளாதார பிரச்சனைகள் சுழற்சி முறையில் இருந்தால், ஒருவகையான பதில்களும், அமைப்பு ரீதியாக இருந்தால் அதற்கு வேறு விதமான பதில்களும் தேவைப்படும். இவர்கள் நினைப்பதைப் போலவே அனைவரும் நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பொருளாதாரம் ஐசியூவில் இருப்பதாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். ரகுராம் ராஜனை அனுப்பிவிட்டீர்கள், அரவிந்த் சுப்ரமணியத்தை அனுப்பி விட்டீர்கள், உர்ஜித் படேலையும் அனுப்பிவிட்டீர்கள். இந்த பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய, பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய எவரும் உங்களுடன் இல்லை. எதிர்கட்சிகளையும் நீங்கள் கேட்கமாட்டீர்கள். பட்ஜெட்டில், டிமாண்டை அதிகரிக்கக்கூடிய எந்த கூறுகளும் இல்லை. மக்களின் கைகளில் பணத்தை அளிப்பதற்கு பதிலாக, முதலாளிகளிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். மக்களிடம் முதலீடு செய்வதற்கு பணம் இல்லை. அவர்கள் நிலையற்றதன்மையில் இருக்கிறார்கள். பயத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
”பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள். மலிவான அரசியல் செய்வதை விடுத்து பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கு உழையுங்கள்” என்பது ஒரு முக்கிய அரசியல்வாதியின் (Modi) கருத்து. 2013 நவம்பர் 2-ம் தேதி அவர் தெரிவித்த கருத்து இது. நிதியமைச்சருக்கு இந்த ஆலோசனையை படித்துக்காட்ட விரும்புகிறேன்” என்று முடித்தார்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.