Home /News /national /

கொல்கத்தா நீதிமன்றத்தில் இருந்து காங்கிரஸ் வழக்கறிஞர்களால் விரட்டியடிக்கப்பட்ட ப.சிதம்பரம்

கொல்கத்தா நீதிமன்றத்தில் இருந்து காங்கிரஸ் வழக்கறிஞர்களால் விரட்டியடிக்கப்பட்ட ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

P chidambaram: மேற்கு வங்க பால்வளதுறை அமைச்சகம் தனியார் பால்நிறுவனம் ஒன்றுக்கு தனது பங்குகளை விற்பதை எதிர்த்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் சௌத்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் காங்கிரஸால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக வாதாட கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் வந்தார்.

மேலும் படிக்கவும் ...
    காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான ப. சிதம்பரம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் வந்தபோது, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் போன்ற உயர் பொறுப்புகளை வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.  சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற ப.சிதம்பரம் பல்வேறு முக்கிய வழக்குகளிலும் ஆஜராகி வாதாடியுள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் வழக்குகளில் ப.சிதம்பரம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் நீதிமன்றத்திலும் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக ப.சிதம்பரம் திகழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், மேற்கு வங்க பால்வளதுறை அமைச்சகம் தனியார் பால்நிறுவனம் ஒன்றுக்கு தனது பங்குகளை விற்பதை எதிர்த்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் சௌத்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் காங்கிரஸால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக வாதாட கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் வந்தார்.



    இது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ப.சிதம்பரத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் வழக்கறிஞர்கள், அவரை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர் என்றும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் செயல்பாடு மோசமாக இருப்பதற்கு ப.சிதம்பரம்தான் காரணம் என்று கோஷம் எழுப்பினார்.இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Congress, P.chidambaram

    அடுத்த செய்தி