பெட்ரோல், டீசல் விலை 19 நாட்களாக உயராததற்கு இதுதான் காரணம் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது.

 • Share this:
  கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதற்கு பெகாசஸ் விவகாரம்தான் முக்கிய காரணம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  இது குறித்து ப.சிதம்பரம் தன்னுடைய ‘ட்விட்டர்' பக்கத்தில், “பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 19 நாட்களாக மாற்றம் இல்லை. ஏனெனில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கி, 18 நாட்கள் ஆகிறது.

  பெகாசஸ் மென்பொருள் செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டுக்கொண்டு இருப்பதாலும் எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அனைத்து துறையின் தலைமை அதிகாரிகள் 15ஆம் தேதி வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவையனைத்தின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

     இன்றும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 102.49-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகின்றது.

  Must Read : பெகாசஸ் விவகாரம் உண்மையாக இருந்தால் குற்றச்சாட்டுகள் கடுமையானவை - உச்ச நீதிமன்றம் காட்டம்

  இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியதும், 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் வென்றதாக சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார். அடுத்து அவர் கேள்வி நேரத்தை தொடங்கினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் பற்றி விவாதிக்கக்கோரி கூச்சலிட்டனர். அது தொடர்பான பதாகைகளையும் கையில் பிடித்திருந்தனர். இந்த அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதுபோல ‘பெகாசஸ்’ தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
  Published by:Suresh V
  First published: