போலியான புள்ளிவிவரங்கள்! இடைக்கால பட்ஜெட்டை விமர்சிக்கும் ப.சிதம்பரம்

10 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

news18
Updated: February 1, 2019, 4:08 PM IST
போலியான புள்ளிவிவரங்கள்! இடைக்கால பட்ஜெட்டை விமர்சிக்கும் ப.சிதம்பரம்
ப. சிதம்பரம்
news18
Updated: February 1, 2019, 4:08 PM IST
நாடாளுமன்றத்தில் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்த புள்ளிவிவரங்களில் எந்த உண்மையும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசின் சார்பில் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டார். பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ் கோயல் இடைக்காலப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார்.

தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட் குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், ‘இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் இல்லை. அது முழு பட்ஜெட்டாகத் தான் இருந்தது.

எனக்கு நினைவில் உள்ளவகையில் இதுதான் மிக நீண்ட பட்ஜெட். 60 வயதைக் கடந்த 10 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இது அவர்களது நோக்கமாக இருந்தால், இந்த நான்கு ஆண்டுகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்.

ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,0000 ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு உதவும் என்று நம்புகிறேன். ஆனால், விவசாயிகள் அல்லாத ஏழைகளுக்கு என்னத் திட்டம் வைத்துள்ளனர்.

நிலமில்லாத விவசாயக் கூலிகளுக்கு என்னத் திட்டம் இருக்கிறது. கிராமங்களுக்கு மின்சார வசதி, இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா வங்கிக் கணக்குகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பியூஸ் கோயல் கூறிய புள்ளி விவரங்கள் போலியானது. அதனை, களத்திலிருந்து கல்வியலாளர்கள், செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை நிருபணம் செய்துள்ளனர். இன்னமும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான வீடுகள் இன்னமும் மின்சார வசதியில்லாமல் இருக்கின்றன.

மக்களுக்கு பட்ஜெட் குறித்த விவரங்கள் முழுமையாக புரியக் கூடாது என்பதற்காகவே, நிதியமைச்சர் பியூஸ் கோயல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இந்தி மட்டும் தெரிந்தவர்களாக அவர்களுக்கு ஒரு பகுதி பட்ஜெட் புரிந்திருக்காது.

ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களுக்கு மறு பகுதி பட்ஜெட் புரிந்திருக்காது. வேண்டுமென்ற, ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் பேசி மக்களை குழப்பியுள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் அறிவித்துள்ளதை நான் பெரிய விஷயமாகப் பார்க்கவில்லை.

அதனைப் பிரித்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு 17 ரூபாய்தான் வருகிறது. நீங்கள், அதனை பெரிய விஷயமாகப் பார்ப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. எல்லா வருடமும் ராணுவத்துக்கு பணம் ஒதுக்குவது 10 சதவீதம் வரை அதிகரிக்கும். அதே அளவுதான் தற்போதும் அதிகரித்துள்ளது. இந்த வருடம் ராணுவத்துக்கென்று சிறப்பாக எதுவும் நிதி ஒதுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...