• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிபிஐ-யை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

சிபிஐ-யை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஏற்கனவே, சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சிபிஐயால் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், திகார் சிறையில் வைத்து சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக்கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திடம் இன்று காலை 8.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர் விசாரணை நடத்தினர். விசாரணையை முன்னிட்டு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும், மனைவி நளினியும் திகார் சிறைக்குச் சென்றனர். இரண்டு மணிநேர விசாரணைக்கு பிறகு ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ப.சிதம்பரத்தை ஜாமினில் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர், அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை கைது செய்தனர்.

இதற்கிடையே, ப.சிதம்பரத்தை திகார் சிறையிலேயே வைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. ஆனால், ப.சிதம்பரத்தை இன்று ஒரு நாள் திகார் சிறையிலேயே வைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை தனி அறையில் வைத்து இன்று அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: