இந்தியாவின் இளம் தொழிலதிபரான ரிதேஷ் அகர்வால் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். தங்கும் விடுதிகளை வாடகைக்கு விடும் பிரபல நிறுவனமான ஓயோ- வின் நிறுவனரான இவர், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
29 வயதான ரிதேஷ் இந்தியாவின் இளம் பெரும் கோடீஸ்வரராவார். இவருக்கு திருமணம் நிச்சயமான நிலையில், தனது திருமண அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு நேரில் கொடுத்து ஆசி பெற்றார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு தனது தாய் மற்றும் வருங்கால மனைவியுடன் சென்ற ரிதேஷ், பிரதமரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
மேலும், பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, தனது திருமணத்திற்கு வந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமருடனான சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ரிதேஷ், தனக்கு நேரம் கொடுத்து வாழ்த்திய பிரதமருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ரிதேஷ் அகர்வாலின் திருமணம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் டெல்லி 5 ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். 2013இல் தனது 19ஆவது வயதில் ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் தனது அபார வணிக யுக்தியால் குறுகிய காலத்தில் வெகு விரைவான வளர்ச்சியை கண்டார். தற்போது 80 நாடுகளில் உள்ள 800 நகரங்களில் இந்த ஓயோ நிறுவனம் செயல்படுகிறது. இவர் தனது தொழில் திறமைக்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.