• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி!

பிரதமர் மோடி!

Mann Ki Baat | PM Narendra Modi | தன்னார்வலர்கள் சிலருடன் உரையாடிய பிரதமர், அவர்களை போன்றவர்களால் தான் பெருந்தொற்றில் இருந்து நம்மால் மீள முடியும் என பாரட்டினார்.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, 10 மடங்கு அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    வானொலியில் பிரதமர் மோடி 77வது முறையாக , மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பெருந்தொற்று கொரோனா என்றார். இதே நேரத்தில் தான் டாக்-தே மற்றும் யாஸ் போன்ற புயல்களை நாம் எதிர் கொண்டு இருப்பதாகவும், அதனை எதிர்கொண்ட மக்களின் தைரியத்தை தான் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

    தன்னார்வலர்கள் சிலருடன் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களை போன்றவர்களால் தான் பெருந்தொற்றில் இருந்து நம்மால் மீள முடியும் என பாரட்டினார். கொரோனா இரண்டாவது அலையில் சிறு பகுதிகளுக்கு மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்வது சவாலாக அமைந்ததாகவும், ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்களை ஓட்டிய ஓட்டுனர்கள் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக பாராட்டினார்.

    Also Read : கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ!

    இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், அதனை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விநியோகித்து வருவதாகவும் தெரிவித்தார். பெருந்தொற்று காலத்திலும் வரலாறு காணாத அளவிற்கு உற்பத்தி செய்த விவசாயிகள், நாட்டிற்கே உணவளித்து இருப்பதாகவும் மோடி பாராட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: