இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
ஆனந்த் அம்பானி குறித்த சில தகவல்கள்....
1995ல் நீடா - முகேஷ் அம்பானி தம்பதியருக்கு, மூன்றாவது குழந்தையாக ஆனந்த் அம்பானி பிறந்தார். ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார். இது அம்பானிகளின் முதலீட்டின் முக்கிய பகுதியாகும்.
27 வயதான ஆனந்த் அம்பானி மற்றும் அவரது தாயார் நீத்தா அம்பானியும் தான் மும்பை இந்தியன்ஸ் அணி கைவசமாவதற்கு முக்கிய காரணம்.
ஆனந்த் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்களின் இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) இன் இயக்குநராக உறுதி செய்யப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Mukesh ambani