Home /News /national /

18 வயதுப் பெண் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, கணவரை ஏன் தேர்வு செய்யக் கூடாது? : அசாதுதீன் உவைசி கேள்வி

18 வயதுப் பெண் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, கணவரை ஏன் தேர்வு செய்யக் கூடாது? : அசாதுதீன் உவைசி கேள்வி

அசாசுதீன் ஓவைசி.

அசாசுதீன் ஓவைசி.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களும், பிரிட்டன், கனடாவில் 16 வயது பூர்த்தி அடைந்தவர்களும் திருமணம் முடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 -ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் உவைசி, 18 வயதுப் பெண் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, கணவரை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தியாவில் கடுமையான சட்டங்களால் குழந்தை திருமணங்கள் குறையவில்லை. மாறாக கல்வி அறிவு, பொருளாதார முன்னேற்றம்தான் இதுபோன்ற சமூக சீர்கேடுகளை குறைத்துள்ளன. சுமார் 1.20 கோடி 18 வயதுக்கு குறைவான பெண்கள் திருமணம் முடிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

    2005-ல் பணிபுரியும் பெண்களின் சதவீதம் 26 ஆக இருந்த நிலையில், 2020-ல் 16 ஆக குறைந்து விட்டது. 18 வயது பூர்த்தி அடைந்த எந்தவொரு இந்திய குடிமகனும் (மகளிர்) ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், வர்த்தகத்தை தொடங்கலாம், பிரதமர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்யலாம். அப்படியிருக்கையில், அவர்களால் தனது கணவரை 18 வயதில் தேர்வு செய்ய முடியாதா?

    இதையும் படிங்க : தில்லையில் தேரோடலைன்னா மன்னனுக்கு கேடு.. அரசு புரிஞ்சு நடக்கனும் - ஹெச்.ராஜா

    ஆண்களுக்கு திருமண வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையும் 18 வயதாக குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 21 வயது நிறைவு பெற்ற எவரும் சட்டமனற் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

    ஒருவர் எப்போது திருமணம் முடிக்க வேண்டும், பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தனியுரிமை (Privacy)என்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

    இதையும் படிங்க : விளையாட்டு நிகழ்ச்சியில் மல்யுத்த வீரரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பாஜக எம்.பி.

    அமெரிக்காவில் பல மாகாணங்களில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களும், பிரிட்டன், கனடாவில் 16 வயது பூர்த்தி அடைந்தவர்களும் திருமணம் முடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு உவைசி கூறியுள்ளார். பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தும் மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க :  நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா? - இணையத்தில் கசிந்த தகவல்
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி