Home /News /national /

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பேசுவதா? - மம்தாவின் பேச்சுக்கு ஓவைசி விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பேசுவதா? - மம்தாவின் பேச்சுக்கு ஓவைசி விமர்சனம்

மம்தா ஓவைசி

மம்தா ஓவைசி

Mamata Banerjee RSS Row | ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பேசிய மம்தா பானர்ஜியை அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்தாதுல் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal | Tamil Nadu
    மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி இருந்துவருகிறார். மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல்வராக மம்தா பானர்ஜி இருந்துவருகிறார். அவர், பா.ஜ.க, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை மிக  கடுமையாக எதிர்த்துவருகிறார். மேற்குவங்கத்தில் ஆளுநருக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்றுவருவது வழக்கமாக இருந்துவருகிறது.

    இந்தநிலையில், வீடியோ ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ‘ஆரம்பக் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் அவ்வளவு மோசமானதாக இல்லை. ஆர்.எஸ்.எஸை நான் அவ்வளவு மோசமானவர்களாகப் பார்க்கவில்லை. இப்போதும், ஆர்.எஸ்.எஸ்ஸில் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள். அவர்கள் ஒருநாள் அவர்களது மௌனத்தைக் கலைப்பார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

    அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவின் தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் இருந்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை செயல்படுத்துவதற்காகவே பா.ஜ.க தொடங்கப்பட்டது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துவருகின்றனர்.

    இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாக மம்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மக்களவை உறுப்பினர் ஓவைசி, ‘2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் அந்த அமைப்பை மம்தா பானர்ஜி பாராட்டி பேசினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வரலாறு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது. குஜராத் படுகொலைக்கு பிறகும் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பேசினார். இவ்வளவு வெளிப்படையான நேர்மையான மம்தாவின் பேச்சுக்கு இஸ்லாமிய தலைவர்கள் அவரைப் பாராட்டுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Archana R
    First published:

    Tags: Asaduddin Owaisi, Mamata banerjee, RSS

    அடுத்த செய்தி