HOME»NEWS»NATIONAL»overall it s not too much haryana chief minister on fuel price hike mut

பெட்ரோல் விலை உயர்வின் மூலம் கிட்டும் வருவாய் மீண்டும் மக்களிடமே அளிக்கப்படும்: ஹரியானா முதல்வர்

பெட்ரோல் விலை நாட்டின் சில பகுதிகளில் லிட்டருக்கு ரூ.100-ஐக் கடக்க, சோனிய காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மக்கள் துயரத்தில் மத்திய அரசு லாபமடையக் கூடாது என்று கண்டித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வின் மூலம் கிட்டும் வருவாய் மீண்டும் மக்களிடமே அளிக்கப்படும்: ஹரியானா முதல்வர்
பெட்ரோல்
  • Share this:

பெட்ரோல் விலை நாட்டின் சில பகுதிகளில் லிட்டருக்கு ரூ.100-ஐக் கடக்க, சோனிய காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மக்கள் துயரத்தில் மத்திய அரசு லாபமடையக் கூடாது என்று கண்டித்துள்ளார்.

ஆனால் மாறாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரோ பெட்ரோல் விலையா அவ்வளவு ஒன்றும் பெரிதாக உயரவில்லையே?” என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

“கடந்த 4-5 ஆண்டுகளில் 10-15% அதிகரித்துள்ளது அவ்வளவுதானே. இது ஒன்றும் பெரிய அதிகரிப்பல்ல, இருப்பினும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. எப்படியிருந்தாலும் இதன் மூலம் கிட்டும் வருவாய் மக்களுக்குத்தான் மீண்டும் போய்ச் சேர்ப்போகிறது.



அரசுக்கு எந்த வகையில் வருவாய் வந்தாலும் மக்களுக்குத்தானே திரும்பச் செல்லப் போகிறது. ஹரியானாவில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவுதான்” என்றார்.

இவர் இப்படிக் கூற மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒரு படி மேலே போய், “கச்சா உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைத்ததால் பெட்ரோல் விலை உயர்கிறது” என்றார்.

“பன்னாட்டு உற்பத்தி குறைந்து விட்டது. உற்பத்தி செய்யும் நாடுகள் எரிபொருள் உற்பத்தியைக் குறைத்து விட்டன. இதனால் நம்மைப் போன்ற நுகர்வு நாடுகள் கஷ்டப்பட வேண்டியதாக உள்ளது” என்றார்.

இதற்கிடையே ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு மட்டும் வரியைக் குறைத்தால் போதாது, மாநில மத்திய அரசுகள் அமர்ந்து பேசி இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றார்.

நாடு முழுதும் பெட்ரோல் விலை, டீசல் விலை எகிறி வருகிறது, 10 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது, கச்சா விலை உயர்வுடன் ஒப்பிட்டு விலை உயர்வதாக மத்திய அரசு கூறிவந்தாலும் மத்திய அரசின் உற்பத்தி வரியினால்தான் இந்த விலை உயர்வு என்று நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்களைத் தொடங்கி விட்டன.

பிரதமர் மோடியோ தன் பங்குக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசுகள் இந்த விவகாரத்தில் நாட்டை இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிச் செய்து விட்டனர் அதனால்தான் என்றனர்.

ஆனால் இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுவது என்னவெனில், மன்மோகன் சிங் காலத்தில் கச்சா விலை பேரலுக்கு 148 டாலர்களாக இருந்த போது கூட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 பக்கத்தில்தான் இருந்தது என்று கூறுகின்றனர்.

இன்னும் சில விமர்சகர்கள், இந்தியாவில் வந்து பெட்ரோலியப் பொருட்களைக் கண்டுப்பிடித்து உற்பத்தி செய்ய நிறைய முதலீடு செய்ய வேண்டியுள்ளது, எனவே அதனை ஈடுகட்ட தனியார் பெட்ரோல் நிலையங்களை நாங்கள் திறக்க வேண்டும் அப்போது பெட்ரோல் விலை ரூ.100 பக்கம் இருந்தால்தான் தங்களுக்கு போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்று கூறியதால் பெட்ரோல் விலை இப்படி உயர்கிறது என்றும் விமர்சிக்கின்றனர்.
Published by:Muthukumar
First published: