Home /News /national /

அறிவுரையை கேட்பதற்கு பதிலாக மேதைகள் கலால் வரியை உயர்த்தி விட்டனர்...! ராகுல்காந்தி கிண்டல் ட்வீட்

அறிவுரையை கேட்பதற்கு பதிலாக மேதைகள் கலால் வரியை உயர்த்தி விட்டனர்...! ராகுல்காந்தி கிண்டல் ட்வீட்

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 35 சதவீதம் அளவுக்கு குறைந்தது”

    கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பலனை மக்களுக்கு வழங்கிடுங்கள் என்றால், மேதைகள் கலால் வரியை உயர்த்தி விட்டார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மூன்று நாட்களுக்கு முன்பே, கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பலனை, பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பின் மூலம் மக்களுக்கு வழங்குமாறு தான் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் தனது அறிவுரையை கேட்பதற்கு பதிலாக, மேதைகள் கலால் வரியை உயர்த்தி விட்டார்கள் என ராகுல்காந்தி கிண்டலாக  விமர்சித்துள்ளார்.





    இது குறித்து ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 35 சதவீதம் அளவுக்கு குறைந்ததை கவனிக்க பிரதமர் தவறியிருக்கலாம். அந்த விலைக் குறைவின் மூலமாக பெட்ரோல், டீசலின் விலையை குறைப்பதன் பலனை மக்களுக்கு வழங்குமாறு கேட்டிருந்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் ஊக்கம் பெறும்  என்று அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Also see... 

    TN Assembly | தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - இன்று மசோதா தாக்கல்

    சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீங்க...! விஜய் சேதுபதி




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Petrol Diesel Price, Rahul gandhi

    அடுத்த செய்தி