டெல்லியில் காகித அட்டை நிறுவனத்தில் தீ விபத்து!

தீ விபத்தைத் தொடர்ந்து, 23 வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

news18
Updated: February 14, 2019, 11:23 AM IST
டெல்லியில் காகித அட்டை நிறுவனத்தில் தீ விபத்து!
தீப்பிடித்து எரியும் காகித ஆலை
news18
Updated: February 14, 2019, 11:23 AM IST
டெல்லியில் காகிதஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. 

டெல்லி நரைனா தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. அங்குள்ள காகித தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

காகித ஆலையின் மேல்தளத்தில் பிடித்த தீ, கொளுந்துவிட்டு எரிந்ததால், அந்த பகுதியை புகைமண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

காகிதங்கள் அதிகமாக வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தீயணைப்பு வீரர்கள், மேலும் சில வாகனங்களையும், தண்ணீர் லாரிகளையும் வரவழைத்தனர். தற்போது வரை 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், விபத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

Also see...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...