லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அல்-பத்ர் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஆகிய தீவிரவாத அமைப்புகளின் அனுதாபிகளும் கள ஊழியர்களுமான 900-க்கும் மேற்பட்டோரை காஷ்மீர் மாநில போலீசார் தடுப்பு காவலில் வைத்துனர்.
காஷ்மீரில் கடந்த சில தினங்களாக சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 7 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரான சீக்கியர் சுப்பிந்தர் கவுர், பள்ளி ஆசிரியரான இந்து மதத்தைச் சேர்ந்த தீபக் சந்த் ஆகியோர் அக்டோபர் 7ம் தேதி கொல்லப்பட்டனர்.
இதேபோல் அக்டோபர் 5ம் தேதி மகான் லால் பிந்த்ரூ, காஷ்மீர் பண்டிட் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மருந்தாளுநர்; பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உணவு விற்பனையாளரான இந்து மதத்தைச் சேர்ந்த வீரேந்தர் பாஸ்வான், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரன முகமது ஷாஃபி லோன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அக்டோபர் 2ம் தேதி 2 இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தொடர் கொலைகள் காஷ்மீரில் சிறுபான்மையின மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தைய தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அல்-பத்ர் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஆகிய தீவிரவாத அமைப்புகளின் அனுதாபிகளும் அந்த அமைப்புகளுக்காக கள பணியாளராக (OGW)இருந்துவரும் 900 பேரை காஷ்மீர் மாநில போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இதையும்படிங்க: மத்திய அமைச்சர் கைது: குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயலும் காங்கிரஸ்- லக்கிம்பூர் விவசாயிகள் கொலையின் நகர்வுகள்
தடுப்பு காவலில் உள்ளவர்களிடம் பல்வேறு அமைப்புகளும் இணைத்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றன. இதன் மூலம், சிறுபான்மையினர் குறிவைத்து கொல்லப்படுவதின் பின்னணியில் உள்ள சதியை அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் இந்தியா!
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு தளவாட உதவிகள் போன்றவற்றை வழங்கி வருபவர்கள் ஆவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.