சாமானிய ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உணவு பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் மாதம் தோறும் ஒரு நபருக்கு தலா கிலோ உணவு தானியம் மானிய விலையில் பெறுகிறார்கள். முன்னதாக இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரசி ரூ.3, ஒரு கிலோ கோதுமை ரூ., ஒரு கிலோ பருப்பு ரூ.1க்கு வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேற்கண்ட உணவு தானியங்கள் இலவசமாக விலையின்றி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. பிரதமரின் ஏழைகள் நலன் திட்டம் என்ற பெயரில் இது செயல்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த இலவச ரேஷன் திட்டம் தொடரும் நிலையில், இது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, இந்த பிரதமர் ஏழை நலன் ரேஷன் திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டு வரும் டிசம்பர் 2023 வரை இலவச உணவு தானியம் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய கையிருப்பு உள்ளது - மத்திய அரசு தகவல்
இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் 81.3 கோடி மக்கள் இலவச உணவு தானியம் பெறுவார்கள்.இதற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு திட்டத்தின் பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு புத்தாண்டு பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.