இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தலையாய பிரச்சனையாக கருதப்படுவது குழந்தைகள் கடத்தல் விவகாரம். கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் குழந்தைகள் தொலைந்து மாயமாகும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாட்டில் நிகழ்ந்துள்ள குழந்தைகள் கடத்தல் அது தொடர்பாக குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேள்வியாக முன்வைத்தார்.
இதற்கு மாநிலங்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக பதில் தெரிவித்தார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 77,535 குழந்தைகள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது. இதே ஆண்டில் 76,827 தொலைந்து போன குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 11,607 குழந்தைகள் காணாமல் போனதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 9,996 குழந்தைகள் தொலைந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 6,399 குழந்தைகள் தொலைந்துள்ளனர். அதேவேளை, 2021ஆம் ஆண்டில் 6,301 தொலைந்து போன குழந்தைகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், அரசு புள்ளிவிவரத்தின் படி தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டில் 4,519 குழந்தைகள் காணாமல் போனதில் 4,263 குழந்தைகள், கண்டறியப்பட்டனர். 2020ஆம் ஆண்டில் 4,591 குழந்தைகள் காணாமல் போனதில், 4373 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இந்த புள்ளிவிவரம் அனைத்தையும் தேசிய குற்ற ஆவணக் காப்பக அமைப்பு தனது “Crime in India” என்ற தலைப்பில் குற்றத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி 2019, 2020 ஆகிய ஆண்டுகளை காட்டிலும் 2021ஆம் ஆண்டு குழந்தைகள் தொலைந்துபோன எண்ணிக்கை கணிசமாக உயர்வு கண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Child Trafficking, Kidnap, Parliament Session