இந்தியாவில் கடும் வெயில், கடுங்குளிர் காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் பலியாகின்றனர்- ஆய்வில் எச்சரிக்கை

மாதிரிப்படம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளதாகவும், இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என்பதை காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் அசாதாரண குளிரால் ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

  2000 முதல் 2019 வரை உலக வெப்ப நிலை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 0.26 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. அதே போல் உலகில் அதி குளிர் காரணமாக ஏற்படும் நோய்களினால் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குளோபல் வார்மிங்கினால் வெப்பம் சார்ந்த மரணங்கள் உலகம் முழுதும் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்கிறது இந்த ஆய்வு. கிழக்கு ஐரோப்பா மற்றும் சப் சஹாரா ஆப்பிரிக்காவில் உஷ்ணம் மற்றும் குளிரினால் ஏற்படும் மரண விகிதங்கள் அதிகம். ஆனால் 2000-19-ல் குளிரால் ஏற்படும் மரண விகிதம் 0.51 குறைய வெப்பத்தால் ஏற்படும் பலி விகிதம் 0.21% அதிகரித்துள்ளது.

  உலகம் முழுதும் இத்தகைய தீவிர தட்பவெப்பத்துக்கு பாதிக்கும் மேல் ஆசியாவில்தான் பலியாகின்றனர். கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் இத்தகைய மரணங்கள் அதிகம்.

  எனவே உலக நாடுகள் வெப்ப் நிலை அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கைகளையும் மருத்துவ உட்கட்டமைப்புகளையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது என்கிறது இந்த ஆய்வு.
  Published by:Muthukumar
  First published: