முகப்பு /செய்தி /இந்தியா / தாய்லாந்தில் ஐடி வேலை வாங்கித்தருவதாக மோசடி..மியான்மரில் சிக்கித் தவிக்கும் 60 இந்தியர்கள்

தாய்லாந்தில் ஐடி வேலை வாங்கித்தருவதாக மோசடி..மியான்மரில் சிக்கித் தவிக்கும் 60 இந்தியர்கள்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 60 இந்தியர்கள்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 60 இந்தியர்கள்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் இருந்து கண்காணித்து உதவி வருகிறது.

  • Last Updated :
  • Delhi, India

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி 60க்கும் மேற்பட்ட இந்தியர்களை மோசடி கும்பல் மியான்மரில் சிக்க வைத்துள்ளது. வெளிநாட்டு வேலை மோகம் என்பது இந்தியாவில் இன்றளவும் குறையாத ஒன்றாக உள்ளது. சொந்த நாட்டை விட நல்ல சம்பளம் என்பதால் குறுகிய காலத்திலே வாழ்க்கையில் மேம்பட்டு விடலாம் என்ற வாய்ப்பு இந்த வெளிநாட்டு வேலையில் உள்ளது. இதனால் வெளிநாட்டு வேலை மீது ஆசை கொண்ட மக்களை குறிவைத்து பல மோசடி கும்பல் இயங்கி வருகிறது.

அப்படியொரு மோசடி கும்பல் தான் தற்போது 60க்கும் மேற்பட்ட இந்தியர்களை மியான்மரில் சிக்க வைத்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போல, புதிதாக தாய்லாந்தில் வேலை செய்ய ஆஃபர்களை வழங்குகிறோம் என பல நிறுவனங்கள் விளம்பரம் வெளியிட்டு வருகின்றன. அப்படி ஒரு மோசடி நிறுவனம் மியான்மரின் எல்லைப் பகுதிகளில் இயங்கி இந்தியர்களை குறிவைத்து வலைவிரித்து மோசடி செய்துள்ளன. தாய்லாந்தில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று ஆசை காட்டி இந்த மோசடி கும்பல் 60க்கும் மேற்பட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டிற்கு வரவழைத்து சிக்க வைத்துள்ளன. இதில் சுமார் 30 இந்தியர்கள் மியான்மரின் மயாவாடி என்ற பகுதியில் சிக்கியுள்ளனர்.

மியான்மரில் ஜனநாயக ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமலில் உள்ளது. அதேவேளை, இந்த மயாவாடி பகுதி அரசு கட்டுப்பாட்டில் அல்லாது, உள்ளூர் புரட்சி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இவர்களை மீட்கும் பணி கூடுதல் சவாலாக உள்ளது. இவர்களை மீட்கும் நடவடிக்கையை கவனத்துடன் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கிக் கணக்கில் தவறுதலாக கிரெடிட் ஆன ரூ.11,677 கோடி.. சமார்த்தியமாக லாபம் பார்த்த முதலீட்டாளர்

top videos

    மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் சிக்கிக்கொண்ட இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது. வெளிநாட்டு வேலைகளை எதிர்நோக்கி செல்லும் நபர்கள், நிறுவனங்களின் உண்மை தன்மையை பல முறை ஆராய்ந்து அவற்றின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே தங்களின் ஆணவங்களை வழங்கி பணி செய்ய முன்வர வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது.

    First published:

    Tags: Abroad jobs, Fake Agencies, IT JOBS, Myanmar, Scam, Thailand