மார்ச் 1ம் தேதி முதல் பெங்களூருவில் 10 வயதிற்குட்பட்ட 470க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா!

மார்ச் 1ம் தேதி முதல் பெங்களூருவில் 10 வயதிற்குட்பட்ட 470க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா!

குழந்தைகளுக்கு அதிகமாக பரவுகிறதா கொரோனா?

பெங்களூருவில் ஒரே மாதத்தில் 10 வயதிற்குட்பட்ட 470க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

  • Share this:
நாட்டின் பிற பகுதிகளை போல கர்நாடகாவிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் கடுமையாக இருப்பதாகவும் மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 60% மேற்பட்ட பங்களிப்பை பெங்களூரு தந்திருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மாத தொடக்கமான மார்ச் 1ம் தேதியில் இருந்து மார்ச் 26ம் தேதி வரையில் 10 வயதிற்குட்பட்ட 244 சிறுவர்களும், 228 சிறுமிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசின் கொரோனா தரவுகள் தெரிவிக்கின்றன. மாத தொடக்கத்தில் (இந்த வயதுடையோர்) தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8 - 9 ஆக இருந்த நிலையில் மார்ச் 26ம் தேதியன்று 46 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த காலங்கள் போன்று அல்லாமல் தற்போது குழந்தைகள் தற்போது வெளியிடங்களில் விளையாடச் செல்வதாலும், பள்ளிகளுக்கு படிக்கச் செல்வதாலும் அதிகம் கொரோனா தாக்குதலால் பாதிப்படைகின்றனர்.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரி்யரும், தொற்றுநோய் பிரிவின் தலைவரும், கர்நாடக மாநில கொரோனா ஆலோசனை குழுவின் உறுப்பினருமான மருத்துவர் கிரிதர பாபு கூறுகையில், “தற்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கின்றனர், பள்ளிகளுக்கு செல்கின்றனர், விளையாட செல்கின்றனர் என்பதால் கொரோனா தொற்று பரவுதலுக்கு அதிகம் ஆளாகின்றனர். ஆனால் முன்னர் பொதுமுடக்கம் காரணமாக இவர்கள் முன்னர் வீட்டில் முடங்கி பாதுகாப்பாக இருந்தனர்.” என்றார்.

மேலும் குழந்தைகளுக்கு நீண்ட நேரம் மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை பராமரிப்பதும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இவர்கள் விளையாட்டு மைதானங்களில், பூங்காக்களில் விளையாடு போது தொற்று பரவுதல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே சிறுவர், சிறுமியர்களுக்கு பள்ளிகளை மூடி நேரடி தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் கிரிதர பாபு கூறினார்.

 
Published by:Arun
First published: