Home /News /national /

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அதிர்ச்சி!

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அதிர்ச்சி!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரையில் 1,409 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் 402 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது.

    நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தற்போது 3,623 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,009 பேரும், டெல்லியல் 513 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு : உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு

    இதனிடையே கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3வது அலை உச்சமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரையில் 1,409 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Also read: கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.. ஊரடங்கு தேவை இல்லை: WHO தலைமை விஞ்ஞானி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி