உலகம் முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. வழக்கமாக இந்தியாவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் இரவு கேளிக்கைகளுடன் கொண்டாட்டப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடுமையாக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் இரவு நேரம் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாகவே இருந்தது. இந்தநிலையில், இந்தியாவின் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனர் புத்தாண்டுக்கு முந்தைய நாள் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
போ.. போ.. நியூ இயர் முடிஞ்சுது அடுத்து பொங்கலுக்கு ரெடி ஆகுங்க - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்
அதன்படி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் பிளின்கிட் தளத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 33,000 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியுள்ளார்.
மேலும், 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில்கள் குளிர்பானங்கள், 6,712 டப் ஐஸ்க்ரீம், 28,240 பாப்கார்ன் அந்த தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,000 கொரோனா சுயசோதனை கருவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி சொமேட்டோவுக்கு ஒரு நிமிடத்துக்கு 7,100 ஆர்டர்களும், ஸ்விக்கு ஒரு நிமிடத்துக்கு 9,000 ஆர்டர்களும் வந்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Condoms, New Year 2022