Home /News /national /

உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்

உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்

உக்ரைனை விட்டு வெளியேற சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

உக்ரைனை விட்டு வெளியேற சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

உக்ரைனை விட்டு வெளியேற சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

    உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியர்களை மீட்கும் பணியான ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மூன்று சி-17 விமானங்கள் நேற்றிரவு 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ரோமானியா, ஹங்கேரியில் உள்ள வழியாக வந்தடைந்தது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்று 18 விமானங்களில் 4000 பேர் இந்தியா வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 48 விமானங்களில் 10,400 பேர் இந்தியா வந்துள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

    நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் உயிரிழக்க வேண்டும் - கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு குரல்

    நாங்கள் அறிவுரை வழங்கியதில் இருந்து தற்போது வரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறியுள்ளனர். இன்னும் பலர் உள்ளனர். எனினும், 20,000 பேர் உக்ரைனை விட்டு வெளியேறியிருப்பது உறுதியாகியுள்ளது.

    உக்ரைனை விட்டு வெளியேற சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதற்கிடையே, நாங்கள் பேருந்துகளை ஏற்பாடு செய்து வருகிறோம்.

    கிழக்கு உக்ரைனில் குறிப்பாக கார்கிவ் மற்றும் பிசோச்சின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எங்களால், அங்கு சில பேருந்து வசதிகளைப் ஏற்பாடு செய்ய முடிந்தது. ஏற்கனவே இயக்கப்பட்ட 5 பேருந்துகளுடன், மாலையில் மேலும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பிசோச்சினில் 900 முதல் 1000 இந்தியர்களும், சுமியில் 700க்கும் மேற்பட்ட இந்தியர்களும் சிக்கியுள்ளனர். இதில், சுமி நிலவரம் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

    இதையும் படிங்க: உக்ரைனில் மேலும் ஒரு இந்தியர் சுடப்பட்டார்: மத்திய அமைச்சர் தகவல்

    போர் நிறுத்தப்படாமல், இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவது என்பது கடினமாக உள்ளது. அதனால், உக்ரைனும், ரஷ்யாவும் குறைந்தபட்சம் உள்ளூர் பகுதிகளில் மட்டுமாவது போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் நாங்கள் எங்கள் மக்களையும், மாணவர்களையும் பத்திரமாக வெளியேற்ற முடியும் என சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி