தண்டவாளத்தை சூழ்ந்த தண்ணீர்... 700 பயணிகளுடன் சிக்கிய ரயில்...!

”குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 700 பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளனர்.”

news18
Updated: July 27, 2019, 1:38 PM IST
தண்டவாளத்தை சூழ்ந்த தண்ணீர்... 700 பயணிகளுடன் சிக்கிய ரயில்...!
சிக்கிய ரயில்
news18
Updated: July 27, 2019, 1:38 PM IST
மும்பையில் பெய்து வரும் கனமழையால், சுமார் 700 பயணிகளுடன் ரயில் நடுவழியில் தண்ணீரில் சிக்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.


மும்பை-கோலாப்பூர் இடையே இயங்கும் மகாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்கனி மற்றும் பத்லாப்பூர் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

10 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 700 பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளனர். இந்தப்பகுதிக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், படகுகள் மூலம் பயணிகளை மீட்டு வருகின்றனர்.

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...