முதல்வரின் மகள் போட்டியிடும் தொகுதியில் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்!

Lok Sabha Election 2019 | மத்திய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக கூறி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

news18
Updated: March 25, 2019, 10:43 PM IST
முதல்வரின் மகள் போட்டியிடும் தொகுதியில் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்!
விண்ணப்பம்: மக்களவை தேர்தலில் போட்டியிடப் படிவம் 2A-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் எனில் படிவம் 2B-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
news18
Updated: March 25, 2019, 10:43 PM IST
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் போட்டியிடும் நிஸாமாபாத் தொகுதியில் சுமார் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. அதே உற்சாகத்தில் தற்போது மக்களவை தேர்தலை அக்கட்சி தனியாக சந்திக்கிறது.

நிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், சுமார் 200 விவசாயிகள் அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை வரை நீண்ட வரிசையில் நின்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளனர்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக கூறி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விவசாயிகளை பாஜக துண்டிவிட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.

Also See....

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...