3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழப்பு.. அடுத்த பெருந்தொற்றுக்கான அறிகுறியா என்னும் பயத்தில் உறைந்த மக்கள்..

கோப்பு படம்

இறந்த நாய்களில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 • Share this:
  எப்படி நோய்கள் வருகின்றன எதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்று விரைவாக நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. இருந்தாலும் நோய்களை குணமாக்குவதற்கான வேலை சற்று தாமதமாகிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கலாம். உதாரணமாக கொரோனா வைரஸை எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடமாகிவிட்டது. இதற்குள் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரும் சிக்கலுக்குள்ளானார்கள். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இப்போது மர்மமான முறையில் நாய்கள் இறந்து வருகின்றன. இந்த இறப்புகள் தான் இப்போது பலரையும் பயத்தில் உறைய வைத்துள்ளது.

  மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் நகரில் கடந்த மூன்று நாட்களில் 200-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்துள்ளன, இது மக்கள் மத்தியில் பீதியைத் கிளப்பியுள்ளது என்று அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மீடியாக்களுக்கு தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை 60 நாய்கள் இறந்ததாகவும், புதன்கிழமை 97 நாய்கள் இறந்ததாகவும், வியாழக்கிழமை 45 நாய்கள் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இது குறித்து துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிஷ்ணுபூரின் குடிமை அமைப்பின் தலைவர் திவேண்டு பாண்டியோபாத்யாய் (Divyendu Bandyopadhyay) தெரிவித்துள்ளார். தற்போது இறந்த நாய்களில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது, "இந்த நேரத்தில் நாய்கள் பொதுவான ஒரு வைரஸ் தொற்று காரணமாக அவைகள் இறந்திருக்கலாம் என்று நங்கள் சந்தேகிக்கிறோம். மேலும் மனிதர்களுக்கோ அல்லது பிற விலங்குகளுக்கோ இவை பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மக்கள் பீதி அடைய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டனர். தற்போது, இறந்த நாய்களின் சடலங்களை புதைத்து வரும் பணிகளில் பிஷ்ணுபூர் நகராட்சி ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா தொற்று நம்மை ஆட்டிப்படைத்து வரும் அதே நேரத்தில், சமீபத்தில் பரவிய பறவை காய்ச்சல் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், மற்றொரு சிக்கல் நாய்கள் மூலம் வருமா? என மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
  Published by:Gunavathy
  First published: